Friday, 28 November 2014

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

சிகப்பு ரோஜாக்கள் படத்தின் 2-ம் பாகத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ல் வெளிவந்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய வெற்றிப் படம் சிகப்பு ரோஜாக்கள். பாக்யராஜ் கதை எழுதியிருந்தார்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

கமல் சைக்கோ கொலையாளி கேரக்டரில் நடித்து இருந்தார். ஸ்ரீதேவிதான் கதாநாயகி. இளையராஜாவின் இனிமையான பாடல்கள், மிரட்டல் இசை, பாரதிராஜாவின் மிகச் சிறந்த இயக்கம் அனைத்தும் சேர்ந்து இந்தப் படத்தை 175 நாட்கள்வரை ஓட வைத்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற நினைவோ ஒரு பறவை, இந்த மின் மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ஆகி இரண்டு பாடல்களும் இடம் பெறாத நிகழ்ச்சிகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சிகப்பு ரோஜாக்கள் 2-ம் பாகம்... பாரதிராஜா மகன் இயக்குகிறார்!

இதே படம் இந்தியில் ரெட் ரோஸ் என்ற பெயரில் பாரதிராஜாவால் ரீமேக் செய்யப்பட்டது.

இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கமல் கேரக்டரில் விசாகன் நடிக்கிறார். பாரதிராஜா மகன் மனோஜ், தன் பெயரை மனோஜ் பாரதிராஜா என்று மாற்றிக் கொண்டு செய்கிறார்.

இந்தப் படத்துக்கு சிகப்பு ரோஜாக்கள் 2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

No comments:

Post a Comment