இப்போதெல்லாம் படப்பிடிப்புகளுக்கு சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளில் வரும் வழக்கம் முன்னணி நடிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
ஆர்யா சைக்கிளில்தான் தினமும் படப்பிடிப்புக்கு வருகிறாராம். வேலை நடந்த மாதிரி, உடற்பயிற்சியும் செய்த மாதிரி...
அஜீத் பற்றி கேட்கவே வேண்டாம். நினைத்தால் தனது டுகாட்டியை எடுத்துக் கொண்டு அச்சரப்பாக்கம் ஹெலிபேட் பக்கமோ, பெங்களூர் நெடுஞ்சாலையிலோ விரைவது அவர் வழக்கம்.
இப்படி பலரும் தங்கள் இரு சக்கர வாகன ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்க, விஜய் மட்டும் சும்மா இருப்பாரா என்ன?
அவர் புதிதாக வாங்கியிருக்கும் இருசக்கர வாகனம், ஹார்லி டேவிட்சன். கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கும் தனது படப்பிடிப்புக்கு இந்த புத்தம் புதிய பைக்கில்தான் சில தினங்களாகப் போய் வந்தாராம். முகத்தில் கர்ச்சீப் கட்டியபடி விருட்டென்று தங்களைக் கடக்கும் விஜய்யை பலரும் பார்த்து, 'டே.. நம்ம விஜய்டா..' என்று வாய் பிளந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த தகவல் அஜீத்துக்கு தெரிய வந்திருக்கிறது. உடனே தன் நண்பனை போனில் அழைத்த அஜீத், 'பைக்ல போறது ஜாலியாதான் இருக்கும். கொஞ்சம் ஹெல்மட் போட்டுக்கிட்டு ஓட்டுனீங்கன்னா சேஃப்...' என்றாராம்.
No comments:
Post a Comment