34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தை என்வி நிர்மல்குமார் இயக்குகிறார்.
ஓம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.
ஒரு வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.
பாரதிராஜா இயக்குநராவதற்கு முன், ஹீரோவாகத்தான் முயற்சி செய்தார். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. புகழ்பெற்ற இயக்குநரான பின்னர் 1980-ல் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தை பாரதிராஜா மேற்பார்வையில் நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் சுமாராகத்தான் போனது. அதற்குப் பிறகு ஹீரோவாக அவர் நடிக்கவில்லை.
தாவணிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார். தாவணிக் கனவுகள் மற்றும் பாண்டிய நாடு படங்களில் அவர் பாத்திரம் சிறப்பாக அமைந்தது.
34 ஆண்டுகளுக்குப் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா.
No comments:
Post a Comment