சென்னை: நம்பர் நடிகையின் நிச்சயதார்த்த செய்தியை ஊர், உலகத்திற்கு எல்லாம் கசியவிட்டது தொழில் அதிபர் சார் தானாம்.
நம்பர் நடிகைக்கு மார்க்கெட் முன்பு போல் இல்லாமல் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவருக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், படத் தயாரிப்பாளருமான ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்ற செய்தி தீயாக பரவியது.
ஆனால் இதை நடிகையும், அவரது தாயும் மறுத்தனர். நிச்சயதார்த்தம் நடந்தால் உங்களுக்கு எல்லாம் சொல்லாமலா என்று தெரிவித்தார்கள்.
எனக்கு நிச்சயதார்த்தம் என்று சொல்வதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பற்றி பேசுங்கள், போர் அடிக்குது என்றார் நடிகை. ஆனால் திருமண செய்தி ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் தான் நடிகை இந்த செய்தியை கசியவிட்ட புண்ணியவான் யார் என்று புலன் விசாரணை நடத்தினாராம். விசாரணையில் அந்த புண்ணியவான் வேறு யாரும் இல்லை தனக்கு யாருடன் நிச்சயமானது என்று கூறப்படுகிறதோ அவரே தான் என்பது நடிகைக்கு தெரிய வந்து அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம்.
அடப்பாவி இந்த ஆள் செய்த வேலை தானா என்று நினைத்து அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இந்த திருமண செய்தியால் அம்மணிக்கு வந்த பட வாய்ப்பும் பறிபோனது என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக தன்னை பற்றிய செய்தியை கசியவிட்டு அதை மறுப்பது 'அந்த' ஹீரோவின் வேலையாச்சே.
No comments:
Post a Comment