சென்னை: ஆம்பள படப்பிடிப்பில் சண்டை காட்சியை படமாக்கியபோது விஷால் காயம் அடைந்தார்.
விஷால் தற்போது சுந்தர் சி. இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹன்சிகா, மதுரிமா உள்பட 3 நாயகிகள். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்து வருகிறது. சுந்தர் சண்டை காட்சி ஒன்றை படமாக்கினார்.
சண்டை காட்சியில் விஷால் வில்லனுடன் மோத வேண்டும். டூப் போடாமல் அவரே நடித்தார். விஷாலின் உடம்பில் கயிறு கட்டி அவர் வில்லனுடன் ஆக்ரோஷமாக மோதும் காட்சியை படமாக்கினர். விஷால் கயிறு மூலம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அப்போது கயிறு அறுந்து விழவே உயரத்தில் இருந்து விஷால் கீழே விழுந்தார். இதில் அவர் காயம் அடைந்தார். அவரது உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த படக்குழு அதிரிச்சி அடைந்தது. விஷாலை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அடுத்து அன்றைய படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
முன்னதாக பூஜை படப்பிடிப்பிலும் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment