Thursday, 20 November 2014

மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் சாதனை...!


சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளிவந்து பட்டித்தொட்டி எங்கும் சக்கைப்போடு போட்ட படம் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் கரண்ட் டீகா என்ற பெயரில் ரீமேக் செய்து கடந்த வாரம் 31ஆம் தேதி வெளியிட்டனர்.
வெளியான முதல் நாளிலேயே இப்படம் சுமார் 4 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளது. கடந்த ஞாயிறு அன்றுடன் முடிந்த முதல் வார இறுதி நாட்களின் வசூலையும் சேர்த்து சுமார் 12 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். பிரபல தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவர் இதுவரை நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்களிலேயே இந்தப் படத்தின் வசூல் அவருடைய பழைய படங்களின் வெற்றியை முறியடித்துள்ளதாம். சன்னி லியோனியின் அட்டகாசமான கவர்ச்சி நடிப்பும், ராகுல் ப்ரீத் சிங்கின் இளமையான நடிப்பும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
சமீப காலத்தில் இப்படி ஒரு கலகலப்பான தெலுங்குத் திரைப்படம் வந்ததில்லை என்பது விமர்சகர்கள் கருத்தாக உள்ளதாம். எப்படியோ தமிழை போன்று தெலுங்கிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது நம்ப ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

No comments:

Post a Comment