Thursday, 20 November 2014

இயக்குநருக்கும், VIP நடிக்கருக்கும் முட்டிக்கிட்டு நிக்கும் ஈகோ பிரச்னை..!

gossip
வெளியே பேட்டி கொடுக்கும் போது விஐபி நடிகரை பற்றி ஆஹா.. ஓஹோ என்று புகழ்ந்தாலும் மனசுக்குள் அந்த நடிகர் மீது பெரிய ஈகோ பிரச்சினையே இருக்கிறதாம் ஆனந்தமான ஒளிப்பதிவு இயக்குநருக்கு.
தற்போது விஐபி நடிகரை வைத்து அனேகமான படம் ஒன்றை எடுத்து வரும் அந்த இயக்குருக்கும், விஐபி நடிகருக்கும் நேரடி மோதலே நடந்துவிடும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். அந்த அளவிற்கு ஈகோ பிரச்னை முட்டிக்கிட்டு நிக்குதாம்.
படப்பிடிப்பு நேரத்தில் விஐபி நடிகர் கொடுத்த டார்ச்சரை மனதில் வைத்துக் கொண்டு படத்தின் புரமோசன்களில் அவர் பெயருக்கு நிகராக படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருக்கும் மாஜி ஹீரோவான ஓயாத அலைகள் நாயகன் பெயரைப்போட்டு நடிகரை வெறுப்பேற்றுகிறாராம் அனேகமான இயக்குநர்.
இதனால் நடிகர் செம கடுப்பில் இருக்கிறாராம். இருவரையும் சமாதானப்படுத்த தயாரிப்பு நிறுவனம்தான் பெரும்பாடு பட்டுக்கிட்டிருக்காம்.

No comments:

Post a Comment