Friday, 28 November 2014

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் அவர்களின் போராட்டங்களை மையமாக கொண்டு பல ஆவண மற்றும் திரைப் படங்கள் கடந்த காலங்களில் வெளி வந்துள்ளன. சமீபத்தில் கூட புலிப்பார்வை என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதோ அடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, ஈழப் போரில் உயிர் தப்பிய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மைன்பீல்டு (கண்ணிவெடி பகுதி) என்ற பெயரில் படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இதனை ஷிலாதித்யா போரா என்பவர் இயக்குகிறார். அவருக்கு இது முதல் படம்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிட்டுள்ளார் போரா. படத்தின் கதையானது தமிழ் படதயாரிப்பாளர் ஒருவரை பற்றியது. அவர் விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனைச் சந்திக்கிறார்.

பிரபாகரனின் கருத்துகள் தயாரிப்பாளருக்கு ரொம்பப் பிடித்துப் போக, படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற தனது கனவை விட தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்ற கனவே மிக முக்கியமானது என பிரபாகரன் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இதைத் தொடர்ந்து இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்து 25 வருடங்கள் வரை தனது வாழ்வினைச் செலவிடுகிறார். அந்த இயக்கத்தின் கொள்கையை விளக்கும் படங்களைத் தயாரிக்கிறார் என்று போகிறதாம் கதை.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவரான படதயாரிப்பாளர் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். அவரது அடையாளத்தை மறைத்தே படத்தில் காட்டவிருக்கிறார் போரா.

இந்தியா-இலங்கை-விடுதலைப் புலிகள் என்ற கோணத்தைத் தாண்டி இது ஒரு மனிதன் குறித்த பதிவு. ஒருவரது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை வைத்து படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இது ஓர் ஆவண படம் அல்ல என்கிறார் போரா.

வருகிற பிப்ரவரி-மார்ச் 2015ல் படம் திரைக்கு வரும். இலங்கை மற்றும் கேரளாவில் இதற்கான படப்பிடிப்பு நடக்கும். இது முதல் படமாக இருந்தாலும் தனக்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறுகிறார்.

ஈழப் போரில் உயிர் தப்பியவர் உருவாக்கும் விடுதலை புலிகள் பற்றிய புதிய படம்!

இந்த படத்தின் ஒளிப்பதிவை கேங்ஸ் ஆப் வாசிபூர், பாம்பே வெல்வெட் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ் ரவி மேற்கொள்கிறார். பெரும்பான்மையான மணிரத்னம் படங்களில் பணியாற்றியுள்ள ஏ. ஸ்ரீகர் பிரசாத் படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். படத்திற்கான ஒலிப்பதிவு பணிகளை ரசூல் பூக்குட்டி செய்கிறார்.

படத்தில் எந்த சார்பு நிலையும் எடுக்காமல், நடந்ததை அப்படியே பதிவு செய்வதாகக் கூறியுள்ளார் போரா. பார்க்கலாம்!

No comments:

Post a Comment