Thursday, 20 November 2014

ஆசைக்கு உட்படாத நடிகை.. வீதியிலேயே மானபங்க படுத்திய இயக்குநர்..!


தெலுங்கில் ஒரு இயக்குநர் 24 பை லவ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் மீது அந்த படத்தில் நடித்த ஹீரோயின் ஹைதராபாத் ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார்.
அதாவது, அந்த இயக்குநர் என்னிடம் படத்தில் நடிக்கவேண்டும் என்றால் என்னை பாலியல் ரீதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டார். என் நிலைமையை அவருக்கு சாதகமாக பயன்படுத்தி, பாலியல் ரீதியாக என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். என்னை காதலிப்பதாகக் கூறி பலமுறை இன்பத்திற்கு அழைத்துள்ளார் என அடுக்கடுக்கான அதிரவைக்கும் குற்றசாட்டுகளுடன் புகார் அளித்துள்ளார்.
அந்த இயக்குநர் அதோடு விடாமல், ரஹ்மத் நகரில் உள்ள என் வீட்டுக்கே நேரடியாகச் வந்து என்னை இன்பத்துக்கு அழைத்தார். அவரின் ஆசைக்கு இணங்க மறுத்து நான் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கையை பிடித்து என்னை மானபங்கப்படுத்தினார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து என்னை காப்பாற்றினார்கள் என்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment